மாநகரில் சுட்டெரித்த வெயிலால் அவதி
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பொழிவற்ற வறண்ட வானிலை காணப்படுகிறது. குறிப்பாக பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது.வட கிழக்கு பருவ மழை காலமான தற்போது மழை பொழிவு இல்லாதது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஈரோடு மாநகரில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. நேற்று, 36.6 டிகிரி செல்சியஸ் வெயில் (97.8 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.