உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாபத்தில் பங்கு தொகை வழங்க சர்க்கரை ஆலை தாமதம் இம்மாத இறுதியில் காத்திருப்பு போராட்டம் என அறிவிப்பு

லாபத்தில் பங்கு தொகை வழங்க சர்க்கரை ஆலை தாமதம் இம்மாத இறுதியில் காத்திருப்பு போராட்டம் என அறிவிப்பு

ஈரோடு :ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை, 2004-08க்கு உட்பட்ட கால லாப பங்குத்தொகை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், இம்மாத இறுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் முனுசாமி கூறியதாவது:சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், 2004-08ம் ஆண்டுக்கு லாபத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பங்குத்தொகை தரவில்லை. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், நீதிமன்றத்தை நாடி, தொகையை வழங்க உத்தரவு பெறப்பட்டது. சர்க்கரை துறை ஆணையரும் ஆலைக்கு உத்தரவிட்டார். இத்தொகை வழங்க தாமதம் ஏற்பட்டதால் கடந்த ஜன., 7 ல் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், 'உடன் பங்குத்தொகையை தர வேண்டும். முன்னதாக, பயனாளிகளான விவசாயிகள் எண்ணிக்கை, வழங்க வேண்டிய தொகை விபரம் தர வேண்டும்' என பேசி முடிக்கப்பட்டது.அதன்படி, 1,014 விவசாயிகளுக்கு, 1.39 கோடி ரூபாய் வழங்க வேண்டும். பின்னரும் பல்வேறு போராட்டம், மனு வழங்கலால் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு குறைந்த தொகை வழங்கிவிட்டு, முகவரி, வங்கி கணக்கு விபர குறைபாடு, பதிவு தபால் திரும்ப வந்தது என பல காரணம் கூறி, 543 விவசாயிகளுக்கு, 69 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.குறிப்பிட்ட ஆண்டு லாபத்துக்கான பங்குத்தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறு சில ஆண்டில் ஆலையில் ஏற்பட்ட நஷ்ட தொகையை கழித்தும் வழங்கி உள்ளனர். அவ்வாறின்றி முழு தொகை தர வேண்டும். எஞ்சியவர்களை அழைத்து வழங்க தவறினால், இம்மாத இறுதியில் தேதியை அறிவித்து, ஆலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !