மேலும் செய்திகள்
மைனர் சிறுவன் விபரீத முடிவு
24-Jan-2025
பவானி: அம்மாபேட்டை அருகேயுள்ள சென்னம்பட்டி ஜர்த்தல், திம்மநா-யக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 58; விவசாயி. கடன் பிரச்னை இருந்ததால் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் கந்தசாமி நேற்று பூச்சி மருந்தை குடித்து விட்டார். வாந்தி எடுத்து மயங்கியவரை, குடும்பத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. * அம்மாபேட்டையை அடுத்த கொமராயனுர், மசக்கவுண்டனுார் பெரியார் நகரை சேர்ந்த தொழிலாளி பழனிச்சாமி, 65; கடந்த, 6ம் தேதி இரவு குடிபோதையில் இருந்தவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில் நேற்று இறந்தார். இரு தற்கொலை குறித்தும் வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* அரச்சலுார் அருகே வெள்ளிகிரிபுதுாரை சேர்ந்தவர் பிரதீப், 31; திருமணமாகி விட்டது, குழந்தைகள் இல்லை. பிரதீப்புக்கு குடிப்-பழக்கத்துடன், ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கம் இருந்-தது. இதை மனைவி கண்டித்து வந்தார். கடந்த, 6ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்தவர், 'தனது தந்தைக்கு பைபாஸ் சர்ஜரி நடந்-துள்ளது' என்று அழுது கொண்டே படுக்கை அறைக்கு சென்றார். இரவு உணவு சாப்பிட கவுசல்யா அழைக்க கதவை திறந்தபோது, உட்புறம் தாழிட்டு இருந்தார். பக்கத்து வீட்டார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் சடலமாக தொங்கினார். புகாரின்படி அரச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jan-2025