மேலும் செய்திகள்
மறியலால் ஏரியில் மண் அள்ள தடை
24-Aug-2024
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
03-Sep-2024
பவானி: பர்கூர் கிழக்குமலை தேவர்மலையில் பெய்யும் மழை, காட்டாறாக வழுக்குப்பாறை வழியாக, வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் ஏரிக்கு வருகிறது. இதில் வழுக்குப்பாறையிலிருந்து செலம்பூரம்மன் கோவில் பூஞ்சோலை தோட்டப்பகுதி பள்ளம் வழியாக, ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன் கனமழையால், செலம்பூரம்மன் கோவில் அருகிலிருந்த பாலமும், பூஞ்சோலை தோட்டம் அருகே இருந்த பள்ளமும் உடைந்தது. இதனால் எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் மழைநீர், கோவிலுார் பள்ளம் வழியாக பூனாச்சி, சித்தார் சென்று காவிரியாற்றில் கலக்கிறது. இரண்டாண்டுகளாக மழைநீர் வராததால், எண்ணமங்கலம் ஏரி நிரம்பவில்லை.அதேசமயம் பூஞ்சோலை தோட்டம் வழியாக வெளியேறும் வெள்ளம், கோவிலுார், குன்னிக்காடு பகுதியில் குடியிருப்புகளில் புகும் அபாயம் உள்ளது. இதனால் செலம்பூரம்மன் கோவில் பாலம், பூஞ்சோலை தோட்ட பள்ளத்தை சீரமைத்து தருமாறு, அப்பகுதி விவசாயிகள் ஓராண்டுக்கும் மேல் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இந்நிலையில் எண்ணமங்கலம், கோவிலுார் பகுதியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தியூர் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தாசில்தார் பூங்கோதை, நீர்வளத்துறை எஸ்.டி.ஓ., ரவி பேச்சுவார்த்தை நடத்தினர்.ஒரு வாரத்தில் பூஞ்சோலை தோட்ட பள்ளத்தை, மண் கொட்டி உயர்த்துவதாகவும், நிதி வந்த பிறகு, பள்ளம் மற்றும் பாலம் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
24-Aug-2024
03-Sep-2024