நந்தா பொறியியல் கல்லுாரியில் தமிழ் திருவிழா இளந்தமிழ்-25
ஈரோடு, ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியில், இளம் பொறியாளர் துறை சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ் கலாசாரம் மற்றும் மரபுகளை நினைவு கூர்ந்து உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ் திருவிழா இளந்தமிழ்-25 என்ற தலைப்பில் நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து பேசினார்.சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை இணை பேராசிரியர் விஸ்வநாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவை தொடங்கி வைத்தார்.கல்லுாரி முதல்வர் ரகுபதி, துறைதலைவர் திருநீலகண்டன் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் புவிசார் குறியீட்டு பொருள், தமிழரின் பண்டைய விளையாட்டு, தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி, சிறுதானியங்கள் மற்றும் பண்டைய திராவிட நாகரிகம் போன்ற பல்வேறு தமிழர் மரபுகளை பறைசாற்றும் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடந்தது.