தமிழ்நாடு நாள் கட்டுரை போட்டி குமுதா பள்ளி மாணவிக்கு பரிசு
ஈரோடு, 'தமிழ்நாடு' நாள் தின விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், நம்பியூர், குமுதா பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மஹன்யா, மாவட்ட அளவில், மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார். அந்த மாணவியை, கலெக்டர் கந்தசாமி பாராட்டி சான்றிதழ், 5,000 ரூபாய் பரிசு தொகை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா மற்றும் பெற்றோர், மாணவியை பாராட்டினர்.