உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் புலிகள் கட்சி மாநில கூட்டம்

தமிழ் புலிகள் கட்சி மாநில கூட்டம்

தாராபுரம்: தமிழ் புலிகள் கட்சி யின் மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை யில் தாராபுரத்தில் நேற்று நடந்-தது.அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திய அனைவ-ருக்கும் நன்றி கூறுதல், ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயரை நீக்கி, அந்தந்த சாதியின் பெயரிலேயே சான்றிதழ் பெற வழி-வகை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. பின் செய்தியாளர்களிடம் நாகை திருவள்ளுவன் கூறியதாவது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்-டது, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக்கு எதிரானது. வேங்கை வயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும், குற்றவா-ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு பகுதி கட்சி நிர்-வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை