தாராபுரம் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
தாராபுரம்: தாராபுரம் டி.எஸ்.பி.,யாக இருந்த சுரேஷ்குமார் இடமாறுதல் செய்யப்பட்டார்.இந்நிலையில் பேரூர் டி.எஸ்.பி., சிவக்குமார், தாராபுரத்துக்கு நியமிக்கப்பட்டார். தாராபுரம் டி.எஸ்.பி.,யாக சிவக்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.