மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
21-Jan-2025
ஈரோடு: தொலை தொடர்பு ஓய்வூதியர் முன்னேற்ற சங்க முதல் மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. சங்க அகில இந்திய துணை பொது செயலாளர் காசிராஜன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் செல்ல பாண்டியன், தொ.மு.ச பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்க-முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஓய்வூதியத்தை வருமான வரியில் சேர்க்க கூடாது. பொது துறையை விற்பதும், பொது துறை சொத்துக்களை விற்பதையும், வி.ஆர்.எஸ். திட்டத்தை அமல்படுத்துவதையும் மாநில மாநாடு கண்டிக்கிறது. மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
21-Jan-2025