கும்பாபிஷேக விழா
புளியம்பட்டி; புன்செய்புளியம்பட்டி நம்பியூர் சாலை, புங்கமர தோட்டத்தில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில், கும்பாபி-ஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்-பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை கோ பூஜையை தொடர்ந்து, 10:௦௦ மணியளவில், மாதேஸ்வரன் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.