உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிக கார் ஸ்டாண்ட்

ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிக கார் ஸ்டாண்ட்

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கார்கள் நிறுத்த விரிவாக்கம் செய்-யப்பட்டு, தற்காலிக ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகம் பல கோடி ரூபாய் மதிப்பில் அம்ருத் பாரத் திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கார்களை திறந்த வெளியில் நிறுத்த வேண்-டிய சூழல்தான் நீடிக்கிறது. ஆனால் அம்ருத் பாரத் திட்டம் நடை-முறையாகும் போது, கார்களை ஷெட்களில் நிறுத்தி வைக்கப்-படும் சூழல் ஏற்படும். நிரந்தர ஷெட் அமைக்கும் பணி துரித கதியில் இயங்கி வருகிறது. இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: கார்களை நிறுத்தி வைக்கும் வகையில் நிரந்தர ஷெட் அமைக்கப்படுகிறது. தற்போது தற்காலிகமாக நிறுத்த வச-தியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ