மக்கள் செலவில் தற்காலிக பாதை; அனுமதி கோரி மனு
பாசூர் வழி நஞ்சை கொளாநல்லி சத்திரம் பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில், ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம், அரவிந்த் அளித்த மனு விபரம்:பாசூர் வழி நஞ்சை கொளாநல்லி சத்திரம் பகுதியில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமம் ஈரோடு-கரூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது.இங்கிருந்து விவசாய விளைபொருட்களை ரயில்வே லைனை கடந்து எடுத்து செல்ல வேண்டும். இங்கு நுழைவு பாலமோ, லெவல் கிராசிங் கேட்டோ இல்லை.இதனால் விவசாய விளை பொருட்களை தலைசுமையாக கொண்டு செல்கின்றனர். நுழைவு பாலம் அமைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். இதற்கு தாமதமாகும் பட்சத்தில் தற்காலிக ரயில்பாதை, பொதுமக்கள் செலவில் அமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.