நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு சான்று
ஈரோடு, :கடநத், 2024--25ல் நடந்த சர்வதேச, தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற, மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் தேசிய மற்றும் மாநில அளவில் கடற்கரை கையுந்து மற்றும் கையுந்து பந்து போட்டியில் சாதனை படைத்த, நம்பியூர் குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீக்கு, துணை முதல்வர் உதயநிதி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் தேசிய, மாநில அளவில் சாதனை படைத்த குமுதா பள்ளி மாணவ, மாணவியர், 22 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.