உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாலையில் மழையால் பாதித்த ஜவுளி வியாபாரம் காலையில் களை கட்டிய மாநகர கடைவீதிகள்

மாலையில் மழையால் பாதித்த ஜவுளி வியாபாரம் காலையில் களை கட்டிய மாநகர கடைவீதிகள்

ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயில் தாக்கம் குறைந்து வானம் மந்தமாகவே இருந்தது. அவ்வப்போது சில நிமிடங்கள் துாறல் போட்டது. இந்நிலையில் மாலை, ௪:௪௦ மணிக்கு தொடங்கிய மழை, 5:20 மணி வரை பரவலாக பெய்தது. மீண்டும், 6.30 மணிக்கு மிதமான வேகத்தில் பெய்தது இரவிலும் நீடித்தது.இதனிடையே தீபாவளிக்காக மாலையில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்க வந்த மக்கள், நசநச மழையால் அவதிக்கு ஆளாகினர். சாலையோரம் கடை அமைத்த சிறு வியாபாரிகளும், மழையில் நனையாமல் இருக்க, துணிகளை பாலத்தீன் மற்றும் பிளாஸ்டிக் கவர்களால் மூடுவதும், எடுப்பதுமாக இருந்தனர். அதேசேயம் காலை முதலே மாநகரில் உள்ள ஜவுளி கடைகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால் ஜவுளிகள் கடைகள் நிறைந்த பகுதியான பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, டி.வி.எஸ்.வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு பகுதிகள் களை கட்டின. சாலைகள் ஜனத்திரளால் நிரம்பி வழிந்தன. ஆர்வத்துடன் துணிகளை வாங்கி சென்றனர். இந்நிலையில்தான் மாலையில் பெய்த மழை, கூட்டத்தை குறைத்தது. பெரும்பாலான கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடின. மழை நின்ற பிறகும், மழைக்கு நடுவிலும் சில இடங்களில் வியாபாரம் சூடாகத்தான் நடந்தது.இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளி விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நன்றாகவே உள்ளது. கடைகளில் புதிய புதிய ரக துணிகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்ததால் வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இன்றும் (நேற்று) பெரும்பாலான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போனஸ் வாங்கி வருவார்கள் என எதிர்பாத்து காத்திருந்தோம். மழை குறுக்கிட்டு ஏமாற்றி விட்டது. இவ்வாறு கூறினர். விவசாயிகள் மகிழ்ச்சிசென்னிமலை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்த நிலையில் நேற்று காலை, 10:௦௦ மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு மாலை, 4:௦௦ மணி வரை வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், ௫:௦௦ மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி, ஒரு மணி நேரம் விட்டுவிட்டு பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.* பவானியில் நேற்று மதியம், 1:00 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரம் பெய்தது. இதேபோல் குப்பிச்சிபாளையம், குருப்பநாயக்கன்பாளையம், மயிலம்பாடி, ஜீவாநகர், தொட்டிபாளையம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால், இதமான சூழல் உருவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !