உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெக்ஸ்டைல்ஸ் பிராசர்ஸ் சங்கத்தினர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு

டெக்ஸ்டைல்ஸ் பிராசர்ஸ் சங்கத்தினர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு

சென்னிமலை, பெருந்துறை சிப்காட் டெக்ஸ்டைல்ஸ் பிராசர்ஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சிப்காட் நல்லா ஓடை நீரின் டி.டி.எஸ்., அளவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணம், சிப்காட் தொழிற்சாலைகள்தான்.ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில தொழிற்சாலைகள் தொடர்ந்து நல்லா ஓடை தண்ணீரில் உப்புத் தன்மை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. இதற்கான காரணங்களை கடந்த கடிதங்களில் சுட்டிக்காட்டியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சமீபத்தில் ஒரு பொது தொழிற்சாலை தங்களது கழிவுநீரை லாரி மூலம் வெளியேற்றியதுடன் சட்ட விரோதமாக நீர்நிலையில் கொட்டியது. இதனால் நிலத்தடி நீரும் நல்லா ஓடையும் மாசடைந்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத தொழிற்சாலைகளின் பாய்லர் நீர், பாய்லர் பயன்படுத்தும் தொழிற்சாலை சாம்பல் கொட்டப்படுவதால் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாசடைகிறது.சில பொது தொழிற்சாலைகள் மூலப்பொருட்களை வெளியில் சேமித்து வைப்பதும், மழை பெய்த காலத்தில் நல்லா ஓடையில் உப்பு நீர் வர வாய்ப்பாகிறது. நல்லா ஓடை நீரின் தன்மை துணி நுால் கழிவு நீரில் உள்ள தன்மை இல்லை. நல்லா ஓடை உப்பு தன்மை, 37 சதவீதம் முதல் 52 வரை உள்ளது. துணி நுால் கழிவில் இரண்டு சதவீதம் மட்டுமே இருக்கும்.இதை ஆய்வில் நிரூபித்துள்ளோம். மேற்கண்ட பிரச்னைகள் தீர்க்கப்படாவிட்டால் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்தாலும் நிலத்தடி நீர் மாசுபாட்டை சரி செய்ய முடியாது.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி