உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தலமலை ஊராட்சியில்தாரை மறந்த மலை கிராம சாலைகள்

தலமலை ஊராட்சியில்தாரை மறந்த மலை கிராம சாலைகள்

தாளவாடி;தாளவாடி யூனியன் தலமலை ஊராட்சியில் உள்ள தடசலட்டி, இட்டரை மலை கிராமங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.உள்ளனர். இந்த கிராமங்களுக்கு, 2006ல் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு சாலை வசதி செய்யப்படவில்லை. இதனால் மழை காலங்களில் சேறு, சகதியாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு பஸ்சும் மழை காலங்களில் வருவதில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அவசர காலங்களில், 4 கி.மீ., துாரம் வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதிக்குள் மக்கள் நடந்து செல்கின்றனர். எனவே தடசலட்டி, இட்டரை மலை கிராமத்துக்கு செல்லும் தார்ச்சாலையை, விரைவில் சீரமைக்க அல்லது புதிய சாலை அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை