உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எம்., மையத்தில் சிலிண்டருடன் சிக்கிய ஆசாமி மனநலம் பாதித்தவர் என்று இன்ஸ்பெக்டர் தகவல்

ஏ.டி.எம்., மையத்தில் சிலிண்டருடன் சிக்கிய ஆசாமி மனநலம் பாதித்தவர் என்று இன்ஸ்பெக்டர் தகவல்

ஏ.டி.எம்., மையத்தில் சிலிண்டருடன் சிக்கிய ஆசாமி'மனநலம் பாதித்தவர்' என்று இன்ஸ்பெக்டர் தகவல்ஈரோடு, நவ. 29-ஈரோட்டில் அதிகாலையில், ஏ.டி.எம்., மையத்தில் காஸ் சிலிண்டருடன் பதுங்கியிருந்த வாலிபரை, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., உள்ளிட்ட இருவர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். ஈரோடு, செங்கோடம்பள்ளத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 4:15 மணியளவில், 30 வயது மதிக்கதக்க வட மாநில வாலிபர் உள்ளே இருந்துள்ளார். அப்போது பணம் எடுக்க ஒரு கால் டாக்சி டிரைவர் சென்றார். உள்ளே இருந்த வாலிபர், பணமில்லை என்று சைகை காட்டி, மையத்தில் எரிந்த விளக்கை அணைத்துள்ளார்.தப்பிச்செல்ல முயற்சிஇதனால் சந்தேகமடைந்த டிரைவர் மையத்துக்குள் பார்த்தபோது, ஒரு காஸ் சிலிண்டர் இருந்தது. சந்தேகம் அதிகரித்த நிலையில், சாலையில் அப்போது நடைபயிற்சி சென்ற ஒருவரை துணைக்கு அழைத்துள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்தபோது பிறகுதான் அவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜன் என்பது தெரிந்தது. இருவரும் சேர்ந்து சென்றபோது, வட மாநில வாலிபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். இருவரும் வாலிபரை பிடித்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசாரிடம் வாலிபரை ஒப்படைத்தனர். தள்ளுவண்டி கடையில்...இதுகுறித்து வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு கூறியதாவது: அந்த வாலிபர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் வைத்திருந்த காஸ் சிலிண்டரை மையத்துக்குள் எடுத்து வந்துள்ளார். ஒப்படைப்புமுன்னதாக மையத்துக்கு அருகிலுள்ள பேக்கரியில் பிஸ்கட் சாப்பிட்டு பணம் கொடுக்காததால், அங்கிருந்தவர்கள் அடித்து அனுப்பியுள்ளனர். சிப்காட்டில் அவரது உறவினர்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்களை வரவழைத்து, வாலிபரை ஒப்படைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ