குண்டம் விழாவுக்கு வரத்தொடங்கிய எரிகரும்பு
கோபி: கோபி அருகே மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவிலின் நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 11ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதனால் தீ மிதிக்கும் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வரும், 26ம் தேதி காலை நடக்கிறது. குண்டத்துக்கு தேவைப்படும் விறகுகளை (எரிகரும்பு), பக்தர்கள் இப்போதே அனுப்ப தொடங்கியுள்ளனர். இவை குண்டத்தின் அருகே குவிக்கப்பட்டு வருகிறது. இன்று சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. இதனால் கோவில் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.