மேலும் செய்திகள்
தம்பதியரிடையே தகராறு; மனைவி விபரீத முடிவு
30-Sep-2024
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், சொக்காய் தோட்டத்தை சேர்ந்தவர் சிதம்பரமணி, 38, பூ கட்டும் தொழிலாளி. இவர் மனைவி நித்யா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிதம்பரமணிக்கு மதுப்பழக்கம் இருந்தால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஏற்பட்ட தகராறால், நித்யா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் அருகிலுள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கணவர் வீட்டுக்கு வந்தார். வெகு நேரமாக தட்டியும் சிதம்பரமணி கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, சேலையில் துாக்கிட்ட நிலையில், சடலமாக தொங்கினார். கருங்கல்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
30-Sep-2024