உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி கரையை மூழ்கடித்த பஞ்., குப்பை விரைவில் ஆற்றை ஆக்கிரமிக்க வாய்ப்பு

காவிரி கரையை மூழ்கடித்த பஞ்., குப்பை விரைவில் ஆற்றை ஆக்கிரமிக்க வாய்ப்பு

பவானி :பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம் பஞ்., பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, குருப்பநாயக்கன்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரத்தில் குவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக கொட்டுவதால், ஆற்றங்கரையில் மலைபோல் குவிந்துள்ளது. தற்போதைய நிலையில் கரையே தெரியவில்லை. குப்பையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் சாக்கடை கழிவு ஆற்றில் கலக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் குப்பையால் காவிரி ஆறு ஆக்கிரமிக்கப்படும் நிலை உருவாகும். பஞ்., நிர்வாகம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தாமல், குப்பையை மாற்றிடத்தில் கொட்ட வேண்டும். அல்லது மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !