உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடி கம்பத்துக்கு கிடைத்தது தீர்வு

கொடி கம்பத்துக்கு கிடைத்தது தீர்வு

கொடி கம்பத்துக்கு கிடைத்தது தீர்வுகோபி, நவ. 24-கோபியில் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய கொடிக்கம்பம் உள்ளது. இதை சுற்றியுள்ள பகுதி மண் தரையாக உள்ளது. இதனால் பெருச்சாளி மற்றும் தெருநாய்கள், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குழி தோண்டியிருந்தது. இதனால் கம்பம் விழுந்து விடும் அபாயம் இருந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக கொடிகம்பத்தை சுற்றி, அத்துறையினர் மண் தரையை நேற்று சமன் செய்தனர். பெருச்சாளி மற்றும் தெருநாய்களால் மீண்டும் குழி ஏற்படாத வகையில், மண் தரையை கான்கிரீட் தளமாக மாற்றுவதே, நிரந்தர தீர்வாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி