மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்
பவானி: அம்மாபேட்டை அருகே கொமராயனுாரை சேர்ந்தவர் தேவராஜ், 50, விவசாயி. இவரது தோட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு, மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டார். சென்னம்பட்டி வனத்-துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில், அங்கு சென்ற வனத்துறையினர், ஏழ அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்-தனர். இதையடுத்து, பிடிபட்ட பாம்பை சென்னம்பட்டி வனப்ப-குதியில் விட்டனர்.