துாரம் பயணித்த அரசு பஸ்
தாராபுரம் :பழனியில் இருந்து தாராபுரம் வழியாக சேலத்துக்கு, ஒரு அரசு பஸ் நேற்று மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டது. 3 கி.மீ., வந்த நிலையில், பின் சக்கரங்களில் ஒன்று பஞ்சரானது. பஸ்ஸில் ஸ்டெப்னி இல்லாததால், தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையை டிரைவர் தொடர்பு கொண்டார். பணிமனைக்கு வந்து ஸ்டெப்னி மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால், 28 பயணிகளுடன், பஸ்சை எங்கும் நிறுத்தாமல், 35 கி.மீ., துாரம் ஓட்டிக்கொண்டு தாராபுரம் அரசு பணிமனையை பத்திரமாக அடைந்தார். அங்கு ஸ்டெப்னி மாற்றிக் கொண்டு ஒரு மணி நேரம் தாமதமாக பஸ் கிளம்பியது. அதுவரை பணிமனை முன் பயணிகள் காத்திருந்தனர்.