உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்களின் ராஜ்ஜியம் தாளவாடி, சத்தியிலும் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்களின் ராஜ்ஜியம் தாளவாடி, சத்தியிலும் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்களின் ராஜ்ஜியம்தாளவாடி, சத்தியிலும் ஆய்வு செய்ய எதிர்பார்ப்புசத்தியமங்கலம், டிச. 11-நம்பியூர் தாலுகா அலுவலகத்தில், புரோக்கர் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் விசாரணை மேற்கொண்டார்.இதில் சம்மந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் தாளவாடி, சத்தி தாலுகா அலுவலகங்களிலும் ஆய்வு செய்ய, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தாளவாடி, சத்தி தாலுகா அலுவலகங்களுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள், பல்வேறு சான்று பெறவும், விண்ணப்பிக்கவும் வந்து செல்கின்றனர். ஆனால், எந்த சான்றும், பணம் தராமல் கிடைப்பதில்லை.உதாரணமாக வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்தால், சொத்து உள்ளதா? எவ்வளவு மதிப்பு? என கேட்டு, ஒரு தொகையை வி.ஏ.ஓ., தொடங்கி அடுத்தடுத்த கட்டத்தில் உள்ள அனைவரும் பணத்தை கறப்பதிலேயே குறியாக உள்ளனர். பணம் கேட்பது நியாயமா என்றால், பல லட்சம் கொடுத்து வந்துள்ளேன். அதை எப்படி சம்பாதிப்பது? என அப்பட்டமாக கேட்கின்றனர். விழிப்புணர்வுள்ள ஒரு சிலர் மட்டும், லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவிக்கின்றனர்.பெரும்பாலானோர் கொடுப்பதை கொடுத்து சான்றிதழ் பெற்று செல்கின்றனர். ஒன்றும் தேறாது என தெரிந்தால், சம்பந்தப்பட்ட மனு தாரரை, அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.பெரும்பாலான தாலுகா அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்ச பணத்தை பெறுவதில்லை. அதற்கென புரோக்கர்களை வைத்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பம், சான்று என்று, தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த கையோடு, லஞ்சம் கேட்பதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தாளவாடி, சத்தி தாலுகா அலுவலகங்களிலும் புரோக்கர் நடமாட்டம் உள்ளதா? என மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சாதாரண மக்களும் அரசு நலத்திட்டங்களை இடையூறு இன்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ