மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுரை
03-Sep-2024
காங்கேயம்: வெள்ளகோவிலில் சுமை துாக்குவோர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட, கலைஞர் மஞ்சள் துண்டு மஹாலை, செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வெள்ளகோவில் தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முத்துகுமார், ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன், திருப்பூர் தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் மோகனசெல்வம், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
03-Sep-2024