உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திட்டமிட்டபடி 18ம் தேதி காத்திருப்பு போராட்டம்

திட்டமிட்டபடி 18ம் தேதி காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை, பெருந்துறை சிப்காட்டுக்காக, ௩௦ ஆண்டுகளுக்கு முன், 300 ஏக்கர் நிலம் கையகம் செய்யப்பட்டது. இந்த நிலங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இழப்பீட்டு தொகையை மறு நிர்ணயம் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன், வரும், 18ம் தேதி ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் அறிவித்திருந்தது. இதுகுறித்து பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமையில் நேற்று அமைதிப்பேச்சு வார்த்தை நடந்தது. கூட்டம் தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி காத்திருப்பு போராட்டம் தொடங்கும் என்று, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி