மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மாரடைப்பால் மரணம்
மாணவர்களுக்கு பாடம் நடத்தியஆசிரியர் மாரடைப்பால் மரணம்அந்தியூர், நவ. 7-ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பூதப்பாடியை சேர்ந்தவர் அந்தோணி ஜெரால்ட், 49. இவர், பர்கூர் வனப்பகுதி, சுண்டப்பூர் மலை கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்தவர், மதிய உணவு அருந்திவிட்டு, நான்காம் வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சேரில் அமர்ந்தவர், அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த மாணவர்கள் கூச்சலிட, அங்கு வந்த சக ஆசிரியர்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பள்ளியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.