மேலும் செய்திகள்
மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி
12-Nov-2024
ஈரோடு, நவ. 22-ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே, பாளையங்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன், 35; திருமணமாகி, ௧௧ வயதில் மகள் உள்ளார். ஐந்து ஆண்டுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்தார். ஈரோட்டில் தங்கி சமையல் தொடர்பான வேலைகளை செய்து வந்தார்.ஈரோடு-பெருந்துறை சாலையில் பாண்டி என்பவரிடம், கடந்த, 10 நாட்களாக வேலை செய்தார். அவர், 4,000 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டியதில், 2,000 ரூபாய் மட்டும் வழங்கிவிட்டு, மீதி வழங்காமல் இழுத்தடித்தார்.இதனால் ஆத்திரமடைந்த ரவிசந்திரன், ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம், உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.
12-Nov-2024