உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் புகுந்த கார் மூவர் உயிர் தப்பினர்

வீட்டில் புகுந்த கார் மூவர் உயிர் தப்பினர்

ஈரோடு: ஈரோடு, திண்டல் அருகேயுள்ள செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ரேவதி. தனியார் கம்பெனி தொழிலாளி. பிரதான சாலையை ஒட்டி வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இரு மகன்களுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை12:10 மணியளவில் வீட்டு முன் பலத்த சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன்புறம் போட்டிருந்த தகர ஷெட்டுக்குள் ஒரு ஹூண்டாய் கிரிடா கார் புகுந்திருந்தது.காரின் அருகில் சென்று பார்த்தபோது, உள்ளே டிரைவர் இருப்பது தெரிந்தது. ஜன்னல் கண்ணாடியை உடைத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். வாலிபருக்கு உடலில் லேசான காயம் இருந்தது. குடிபோதையில் இருந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணையில், காரை அதிவேகமாக குடிபோதையில் ஓட்டி வந்தது ஈரோடு, சக்தி நகரை சேர்ந்த வருண், 24, என தெரிய வந்தது. சேதமான ஷெட், டூ - வீலர்களை சரி செய்து தருவதாக, ரேவதியிடம் பாலாஜி உறுதியளித்துள்ளார். இதனால் விபத்து குறித்து புகார் தரப்படவில்லை என்றும், போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ