மேலும் செய்திகள்
புரட்டாசி மாத முதல் சனி வழிபாடு அமோகம்
21-Sep-2025
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடப்-பாண்டு புரட்டாசி தேர்திருவிழாவின், தெப்போற்சவ விழா நேற்-றிரவு, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. முன்னதாக காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடந்-நது. இதற்காக கஸ்துாரி அரங்கநாதர் சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார். இதையடுத்து சுவாமி திருவீதியுலா கோவிலில் துவங்கி, மணிக்-கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் வீதி வழி-யாக தெப்பக்குளத்தை அடைந்தது. பின் சிறப்பு பூஜைகளுடன் தெப்போற்சவ நிகழ்ச்சி நடந்தது. தெப்பக்குளத்தின் நடுவில் காட்-சியளித்த அரங்கநாதரை 'கோவிந்தா' கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை, 6:3 மணிக்கு ஆஞ்சநேய-ருக்கு வடமாலை சாற்றுதலுடன், புரட்டாசி விழா நிறைவடைகிறது.
21-Sep-2025