உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் தீர்த்த குடங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சென்னிமலையில் தீர்த்த குடங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சென்னிமலை, மே 11சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில், அக்னி நட்சத்திர விழா வழிபாட்டு குழு சார்பில், சப்த நதி புனித தீர்த்த அபிஷேகம் நடக்கிறது. நடப்பாண்டு, 42வது ஆண்டாக கடந்த, 8ம் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் திருமஞ்சன அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து அக்னி நட்சத்திர விழா வழிபாட்டு குழு சார்பில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், சென்னிமலை மாரியம்மன் கோவிலில் திரண்டனர். அங்கிருந்து காலை, 6:30 மணிக்கு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். சென்னிமலை மலை கோவிலை, 16 கி.மீ., சுற்றி கிரிவலம் வந்தனர். இரவில் மலை கோவிலை அடைந்தனர். இன்று காலை சுப்ரமணிய சுவாமிக்கு, சப்தநதி தீர்த்த அபிஷேகம், 108 கலசாபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெபம் காலை, 7:00 மணி முதல் நடைபெறுகிறது. நண்பகல், 12:00 மணிக்கு மேல் மகா தீபாராதனை, அதை தொடர்ந்து உற்சவ மூர்த்தி புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை