உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைதுகோபி, டிச. 18- கோபி அருகே, அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கோபி அருகே உக்கரம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரேவதி, 45, கார்த்திக், 40, என இருவர் அனுமதியின்றி எட்டு மதுபாட்டில்களை, விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல், கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் மொட்டணம் பகுதியில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 40, என்பவர் அனுமதியின்றி, 26 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை