உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் ஸ்கூட்டரில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடிய மூவர் கைது

ஈரோட்டில் ஸ்கூட்டரில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடிய மூவர் கைது

ஈரோடு, ஈரோடு கனிராவுத்தர்குளத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35, தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி தேனருவி, 32. இருவரும் கடந்த, 21ல், பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டல் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றனர். ஸ்கூட்டரில் நான்கு பவுன் நகையை வைத்திருந்தனர். திரும்ப வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் சீட்டின் கீழ் இருக்கும் பெட்டி திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிலிருந்த நான்கு பவுன் நகை மாயமாகி இருந்தது. ஈரோடு சூரம்பட்டி போலீசில் தம்பதியர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில், நான்கு மர்ம நபர்கள் ஸ்கூட்டரின் டிக்கியை போலி சாவி பயன்படுத்தி திறந்து, உள்ளே இருந்த நகையை திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் பழங்குற்றவாளிகளான, சின்ன சடையம்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 29, ஈரோடு ரங்கம்பாளையம் ராம், 31, சென்னிமலையை சேர்ந்த நவீன்குமார், 31, என்பது தெரியவந்தது. மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3.5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். கைதான மூவர் மீதும் பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை