உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரட்டையர் உள்பட மூன்று பேர் மாயம்

இரட்டையர் உள்பட மூன்று பேர் மாயம்

ஈரோடு, ;ஈரோடு வீரப்பன்சத்திரம் சேரன் வீதியை சேர்ந்தவர் தனபால். இவரின் இரட்டையர் மகள் ஸ்ரீபிரியா, 19, ஸ்ரீதேவி, 19; இருவரும் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.காம்., படிக்கின்றனர். இருவரும் கல்லுாரிக்கு செல்லாமல் மொபைல்போனை பார்த்தபடி இருந்துள்ளனர். இதை பெற்றோர் கண்டித்து, 10 நாட்களுக்கு முன் மொபைல் போன்களை வாங்கி வைத்து விட்டனர். கடந்த, 22ம் தேதி நள்ளிரவில் இருவரும் வீட்டில் இருந்து மாயமாகி விட்டனர். தனபால் மனைவி சம்பூர்ணம் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோடு திருநகர் காலனி கிருஷ்ணம்பாளையம் சாலை ராமமூர்த்தி நகரை சேர்ந்த ராஜா மகள் தீபிகா, 28; தனியார் டெக்ஸ்டைல் ஊழியர். கடந்த, 22ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை ராஜா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ