உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை ஊசி பயன்படுத்திய மூன்று வாலிபர் கைது

போதை ஊசி பயன்படுத்திய மூன்று வாலிபர் கைது

ஈரோடு, ஈரோடு, வைராபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த செந்தில் மகன் தீபக், 21, ராமமூர்த்தி நகரை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ், 20, கக்கன் நகரை சேர்ந்த ஏழுமலை மகன் கர்ணன், 21, என்றும், கட்டட தொழிலாளிகள் எனவும் தெரியவந்தது. விசாரணையில், போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்தி கொண்டதை ஒப்புக்கொண்டனர். மூவரையும் போலீசார் கைது செய்து, ஆறு வலி நிவாரண மாத்திரை, மூன்று ஊசிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை