மேலும் செய்திகள்
லாரி கிளீனருக்கு குண்டாசில் சிறை
16-Jul-2026
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவியான கட்டட தொழிலாளி வளர்மதி, 65; பெருந்துறை காஞ்சிகோவில் அருகே கடந்த ஜூன், 23ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரித்த காஞ்சிகோவில் போலீசார், திருப்பூர் குன்னத்துாரை சேர்ந்த கட்டட மேஸ்திரி விஜயகுமார், 47, என்பவரை கைது செய்தனர்.வளர்மதியுடன் நெருங்கி பழகிய விஜயகுமார், 5,000 ரூபாய் வாங்கி விட்டு தராமல் இருந்துள்ளார். இதை அவர் திருப்பி கேட்டபோது, காஞ்சிகோவில் அருகே அழைத்து சென்று கொலை செய்தது தெரிய வந்தது. கைது செய்து போலீசார், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விஜயகுமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, காஞ்சிகோவில் போலீசார் எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், விஜயகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
16-Jul-2026