அரவஅரவக்குறிச்சியில் இடியுடன் மழை
குறிச்சி, நவ. 3-அரவக்க்குறிச்சி பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 4:15 மணி முதல் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்ததால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறு போல ஓடியது. மழையால் குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.