உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு ஜப்பானின் பிரதர் நிறுவனம் விருது

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு ஜப்பானின் பிரதர் நிறுவனம் விருது

திருப்பூர்,: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்களில், பெரும்பாலானவை ஜப்பானில் தயாரிக்கப்படுகின்றன. தையல் மற்றும் எம்ப்ராய்டரி இயந்திரங்கள் தயாரிப்பில், ஜப்பானிய உற்பத்தியாளரான, 'பிரதர் இண்டஸ்ட்ரீஸ்' முன்னிலையில் உள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் குழு, ஜப்பானில் நடைபெற்று வரும் இயந்திர தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. ஜப்பான் சென்றுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் குழுவினருக்கு, 'பிரதர் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், விருது வழங்கி கவுரவித்துள்ளது.சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்று குறிப்பிடப்படும் திருப்பூர் கிளஸ்டர், உலகளாவிய ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. தன்னம்பிக்கையுடன், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது, சர்வதேச சந்தைகளில் திருப்பூரின் பங்களிப்பை மேம்படுத்துகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கு ஜப்பான் நிறுவனம் வழங்கியுள்ள விருது, தொழில்நுட்ப பகிர்வுக்கும், திருப்பூரின் முன்னேற்றத்துக்கும் கிடைத்த சான்றாக கருதுகிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை