மேலும் செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
28-May-2025
ஈரோடு: ஈரோடு, அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளர் அலுவ-லகம் முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் முன்-னேற்ற சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டல தலைவர் ஜெ.நவநீதகுமார் தலைமை வகித்தார்.அரசு போக்குவரத்து டிரைவரை, செருப்பால் அடித்த மதுரை போக்குவரத்து அதிகாரி மாரிமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும். அவருக்கான பண பலன்களை அரசு வழங்க கூடாது. இதுபோல் பல டெப்போக்களில் அதிகாரிகள் மோசமான முறையில் டிரைவர், கண்டக்டர்களிடம் நடந்து கொள்வதால், இப்பிரச்னைக்கு போக்குவரத்து கழகமும், அரசும் முறையான தீர்வு காண வேண்டும். அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்-படும் என தெரிவித்தனர்.
28-May-2025