உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக டோல்கேட் மாற்றம்

சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக டோல்கேட் மாற்றம்

சென்னிமலை:--சென்னிமலை முருகன் கோவிலில் வனத்துறை இடத்தில் இருந்த டோல்கேட் இரவோடு, இரவாக மாற்றி அமைக்கப்பட்டது.சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள மலை பகுதி 1,720 ஏக்கர் பரப்பளவு கொண்டது. காப்புக்காடாக அறிவிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இதுவரை காப்புக்காடு என வனத்துறை பெயர் பலகை வைக்கவில்லை. இந்நிலையில் கடந்த, 15ம் தேதி புதியதாக காப்புக்காடு என, கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரு இடங்களில் பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள டோல்கேட் வனத்துறை இடத்தில் இருந்தது. இதை அகற்ற வனத்துறை உத்திரவிட்டதை தொடர்ந்து, பழைய டோல்கேட் அகற்றப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதியதாக டோல்கேட் அமைக்கப்பட்டது. மேலும், தகர செட்டில் அமைக்கப்பட்டிருந்த டோல்கேட் அலுவலகத்தையும், கோவில் நிர்வாகம் தானாக முன்வந்து அகற்றி, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைத்து விட்டது. மலைப்பாதை சீரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், மலை கோவிலில் எந்த பணியையும் வனத்துறை அனுமதியின்றி செய்யக்கூடாது எனவும், வனத்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் கோவில் அலுவலக ஊழியர்கள், அலுவலர்கள் அடுத்து எந்த அறிவிப்பை, வனத்துறை அறிவிக்கப்போகிறதோ? என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி