உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளைய கிராம சபை கூட்டம் ரத்து

நாளைய கிராம சபை கூட்டம் ரத்து

ஈரோடு:மாநில அளவில் நாளை கிராம ஊராட்சிகளை, 'சுத்தமான மற்றும் சுகாதாரமான ஊராட்சியாக' அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 பஞ்.,களிலும் மாதிரி கிராமங்களாக அறிவித்து, இணைய தளத்தில் படிவங்களை பதிவேற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற, சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 3ம் தேதியை பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்தது. இதனால், 3ம் தேதி நடக்க இருந்த சிறப்பு கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் வைப்பதற்காக தயார் செய்யப்பட்ட தீர்மானம், வரும், 11ல் நடக்க உள்ள கிராமசபை கூட்டத்தில் சேர்க்கப்படும் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ