மேலும் செய்திகள்
கொடிவேரி 'வெறிச்'
23-Dec-2024
கோபி, ஜன. 2-கொடிவேரி தடுப்பணை வழியாக, தண்ணீர் அருவியாக கொட்டாததால், ஆங்கில புத்தாண்டு நாளில், சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு நாளான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். ஆனால் தடுப்பணை வழியாக நேற்று வினாடிக்கு, 20 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியது. இதனால் தண்ணீர் கொட்டாததால், சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி ஏமாற்றத்துடன், பவானி ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்து சென்றனர். சிலர் பரிசல் பயணம் சென்று, அவரவர் ஊர் திரும்பி சென்றனர்.
23-Dec-2024