மேலும் செய்திகள்
வேளாண் இயந்திர பயிற்சி இளைஞர்களுக்கு வாய்ப்பு
04-Oct-2026
ஈரோடு; வேளாண்மை பொறியியல் துறையில், ஆறு அரசு இயந்திர கலப்பை பணிமனைகளை டிராக்டர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியாக, வட்டார போக்குவரத்து அலுவலரின் அங்கீகாரம் பெற்று, கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சியை அளித்து, தமிழகத்தில் முதன் முறையாக டிராக்டர் ஓட்டுனர் என்றே வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் உரிமம் பெற்று தரப்படுகிறது.இதன்படி, 2021-22 முதல் இதுவரை, 586 கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல், வேளாண் இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி மற்றும் டிராக்டர் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை பயிற்சி பெற்ற, 256 இளைஞர்களுக்கு (இதில் 58 பெண்கள்) ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட்டுள்ளது. உரிமத்துடன் டிராக்டர் டிரைவர் பயிற்சி பெற, ஈரோடு வேளாண்மை பொறியியல் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
04-Oct-2026