மேலும் செய்திகள்
திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2024
ஈரோடு: ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில், வர்த்தக கண்காட்சி நடந்தது. முதலியார் கல்வி குழுமங்களின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். முதலியார் கல்வி குழுமங்களின் செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீகங்கா புட் பிராடக்ட்ஸ் நிர்வாக இயக்குனர் கங்காடி லோகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லுாரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் கலந்து கொண்டனர். மாணவர்களின் வணிக அறிவை மேம்படுத்தும் விதமாக, 70 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு வித ஆடைகள், மெஹந்தி, ஒப்பனை பொருள், டாட்டூஸ், உணவுப் பொருள் அமைந்த கடைகள், போட்டோபிரேம், பல்வித கைப்பை, இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என பல்வேறு கடைகள் இடம் பெற்றிருந்தன. ஏற்பாடுகளை வங்கியியல் மற்றும் நிதியியல் துறை தலைவர் இளம்பரிதி தலைமையில், பேராசிரியர்கள் செய்தனர்.
06-Sep-2024