மேலும் செய்திகள்
'பனியன் தொழிலாளருக்கு 120% சம்பள உயர்வு தேவை'
21-Aug-2025
திருப்பூர், திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்.,) செயற்குழு கூட்டம், குமரன்ரோடு அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பூபதி, துணை செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர். பனியன் தொழிலாளர்களுக்கு, 150 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். பஞ்சப்படி, மாதம் 3000 ரூபாயும், அதிக புள்ளிக்கு, தலா, 30 பைசாவும் வழங்க வேண்டும். பயணப்படி, 50 ரூபாய், வீட்டு வாடகைப்படியாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.எட்டு மணி நேர வேலையை உறுதி செய்து, ஓவர்டைம் பேட்டாவை, 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். புகார் கமிட்டி அமைக்க வேண்டும்; காப்பீடு வழங்க வேண்டும். கல்வி உதவி, திருமண உதவி, கூட்டுறவு கடன் உதவி. சுற்றுலா உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
21-Aug-2025