உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காமராஜ் மேல்நிலை பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

காமராஜ் மேல்நிலை பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

நம்பியூர், நம்பியூர் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜவகர் தொடங்கி வைத்தார். இணை தாளாளர் சுமதி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான ராகியில் தயாரித்த பல்வேறு உணவுகளை கொண்டு வந்தனர். ராகி களி, ராகி கூழ், ராகி பிரவுனி, ராகியில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையிலான நுாற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். உணவை குறைந்த விலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விற்பனை செய்து, எவ்வாறு வணிகம் செய்ய வேண்டும் எனவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் முத்துக்கருப்பன், துணை முதல்வர் ஜெயந்தி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !