மேலும் செய்திகள்
பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்
09-May-2026
ஈரோடு:மதுரை - திண்டுக்கல் இடையே தண்டவாளம் மற்றும் பிற பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் ரயில் எண்: 16845 - ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஈரோட்டில் மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் வரும், 7 முதல், ஜூலை 6 வரை ஜூன் மாதம் செவ்வாய் கிழமைகளான, 9, 16, 23, 30 ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படாது. ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.அதுபோல, ரயில் எண்: 16846 - செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில், வரும், 8 முதல் ஜூலை, 7 வரை புதன் கிழமைகளான வரும், 10, 17, 24, ஜூலை, 1 ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் செங்கோட்டை - திண்டுக்கல் வரை இயக்கப்படாது. திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
09-May-2026