போக்குவரத்து ஊழியர்கள்4வது நாளாக போராட்டம்
ஈரோடு, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோட்டில் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், நான்காவது நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. மண்டல நிர்வாகி இளங்கோ தலைமை வகித்தார்.சட்டசபை தேர்தல் தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.