உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உயிர் நீத்தவர்களுக்கு அந்தியூரில் மரியாதை

உயிர் நீத்தவர்களுக்கு அந்தியூரில் மரியாதை

அந்தியூர் :அந்தியூர் கார் ஸ்டாண்ட், ஒலகடம், பருவாச்சி, வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதியில், வன்னியர் சங்கம் சார்பில், தியாகிகளுக்கு நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. வன்னியர் சங்க மாவட்ட செயலர் மனோகரன் தலைமையில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. பா.ம.க., மாவட்ட செயலர் ஆண்டவர், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், ஒன்றிய செயலர்கள் பூபதி, மன்னாதன், மாவட்ட அவைத் தலைவர் சரணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !