உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருட்கள் கடத்திய த.வெ.க., பேரூர் செயலர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய த.வெ.க., பேரூர் செயலர் கைது

மேட்டூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தியதாக, த.வெ.க., பேரூர் செயலரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மேச்சேரி, கோல்காரனுார் திட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுர்ஜித், 25; த.வெ.க., மேச்சேரி பேரூர் செயலராக உள்ளார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, 1 கி.மீ., துாரம் பென்னாகரம் செல்லும் சாலையில், டாடா இண்டிகா கார் மேச்சேரி நோக்கி சென்றது. அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மேச்சேரி போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 1.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 226 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சாக்கு மூட்டைகளில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் மேச்சேரிக்கு காரில் கடத்தி செல்வது தெரிந்தது. மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்த போலீசார், சுர்ஜித் மீது வழக்கு பதிந்து நேற்று மாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !